தி.மு.க.வின் 75வது ஆண்டு பவள விழாவின் ஒரு பகுதியாக, தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. முதல்வரின் வருகையையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையின் இரு ஓரங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடி, கொடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. மீடியனில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டிருந்த பகுதியில் வளர்ந்திருந்த களைச்செடிகள் அகற்றப்பட்டு, மீடியனுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மேலும், பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மீடியன் மற்றும் தடுப்புச்சுவர்களுக்கு வர்ணம்பூசப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் வருகையால், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையும், புதிய ரயில்வே மேம்பாலமும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.