சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம்

60பார்த்தது
சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் எதிரில், சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புதன், வியாழன், சனிக்கிழமை மட்டுமின்றி ஆஞ்சநேயர் பிறந்த மூல நட்சத்திர தினத்தன்று திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் மழை பெய்யும்போது, இக்கோவில் வளாகத்தில் பெய்யும் மழைநீர், வடிகால்வாய் வழியாக வெளியேறும் வகையில், பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மழை பெய்யும்போது, மழைநீர் வெளியேறாமல், மாறாக வடிகால்வாயில் முறைகேடாக விடப்பட்டுள்ள கழிவுநீர், பைப்லைன் வழியாக 'ரிட்டர்ன்' ஆகி கோவில் வளாகத்தில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மழைநீருடன் கலந்த கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் ரிட்டர்ன் ஆகாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி