கூடுவாஞ்சேரியில் தொடர் மின்வெட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு நிலவுவதாகவும், அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை கடுமையான அவதி அடைந்து வருவதாகவும், கூடுவாஞ்சேரி நகரப் பகுதியில் முழுவதும் சூழ்ந்து காணப்படுவதால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

அப்போது மின்வாரிய அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவரிடம், மின் தடை எதனால் ஏற்படுகிறது என கேட்டபோது தெரியாது என பதில் அளித்ததால் மின்தடைக்கான காரணம் குறித்து நீங்கள் தான் தொழில்நுட்ப ரீதியாக பதில் அளிக்க வேண்டும், மின்தடை ஏற்பட்டால் ஆள் பற்றாக்குறை காரணமாக விரைவில் சரிசெய்ய முடியவில்லையா? வயர்களை மாற்ற வேண்டுமா? என ஆராய்ந்து பார்த்து பதில் சொல்லுங்க என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி