"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியிடம், மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கும், வேறு சிலரின் படுகொலைக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற அவதூறு வதந்தி பரப்பியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை கைது செய்திட வலியுறுத்தி இன்று (செப் 29) காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அனிஷ் ராஜ்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர்.
"மேலும் இந்த அவதூறு கருத்தை அவரே தன்னிச்சையாக பரப்பி வருகிறாரா? அல்லது அவரது பின்னணியில் வேறு யாரேனும் தூண்டுதலோடு இந்த கருத்துக்களை பரப்புகிறாரா? என்று விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்லி, குமரேசன், மைக்கேல், ஒரகடம் ஆனந்தராஜ், கோபி மோகித்ஆல்வின், சதீஷ், மேட்டுகுப்பம் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.