குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தில், குழந்தைகளை வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. இங்கு, பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்த, 6 - 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களை, பெற்றோரிடம் இணைத்து, குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறித்து முழுமையாக அறிந்து, குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் வாயிலாக, குழந்தைகளை வளர்க்க விருப்பம் உள்ளவர்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் 63826 13182 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.