1425 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

84பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் டாக்டர் எம். ஜி. ஆர். , பாரத சாரண சாரணியர் பயிற்சி மைய வளாகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒரே நாளில் 1425 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்துக்கொண்டு திருப்போரூர் வட்டத்தை சேர்ந்த 513 பேருக்கும், திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த 912 பேர் என 1425 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். மேலும், தோட்டக்கலைத்துறை சார்ந்த தர்பூசணி விதை தொகுப்பு, மருந்து தெளிக்கு இயந்திரம் ஆகியவற்றை இரண்டு பயணாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தை சார்ந்த 1. 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 11 அரசு கட்டிடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில்,
காஞ்சிபுரம் எம். பி. , செல்வம்,
மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி,
திருப்போரூர் எம். எல். ஏ. எஸ் எஸ் பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் பெருந் தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன், ஒன்றிய துணைத்தலைவர் சத்யா சேகர், ஒன்றிய செயலாளர் தமிழ்மணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி