சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர். இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதை வழியாக அமைவதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அலுவலர்கள் கூறுகையில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பெரும்பாலானவை மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் தடம் அமைகிறது. இந்த பணிகள் தாமதம் இன்றி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது என்று கூறினர். மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் இதுவரை 40 வழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளது.