மதுராந்தகத்தில் மின் ஒயர் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

60பார்த்தது
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே செல்லும் மின் கம்பத்தின் மீது இடித்தாக்கி மின் ஒயர்கள் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் திருச்சி டு சென்னை சென்னை டு திருச்சி இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இரு சாலைகளிலும் போக்குவரத்து கடும் நெரிசல்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் என்ற இடத்தில் திருச்சி To சென்னை சென்னை To திருச்சி இரு தேசிய நெடுஞ்சாலியின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்மின் ஒயர்கள் சாலையின் குறுக்கே சென்றது
மின்கம்பம் அருகே இருந்த பனைமரத்தின் மீது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த காரணத்தால் பனை மரத்தில் இடி தாக்கியதில் பனைமரம் சிதறியது அதிர்வு காரணமாக அருகில் மின் கம்பத்தில் இருந்த ஒயர்கள் அனைத்தும் அறிந்து இரு சாலை குறுக்கே விழுந்தது இதனால் இரு தேசிய நெடுஞ்சாலிகளும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து காணப்படுகிறது இந்த போக்குவரத்தானது சரி செய்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலானத இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை நெரிசல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின் ஒயரை அகற்றி சாய்ந்து இருந்த கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
எதிர்பாராத நடந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி