சோழிங்கநல்லூர்: மழைநீர் வடிகால் விரிவாக்கப் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

57பார்த்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி 181வது வார்டு கொட்டிவாக்கம், 183வது வார்டு பாலவாக்கம், 192வது வார்டு நீலாங்கரை மற்றும் 194வது வார்டு ஈஞ்சம்பாக்கம் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகளில் Sustainable Urban Infrastructure Development Chennai Storm Water Management Project திட்டத்தின் கீழ் ரூ. 83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் விரிவாக்கப் பணிகளின் துவக்க விழா பாலவாக்கம் பெரியார் சாலை பகுதியில் இன்று (பிப். 12 புதன்கிழமை) பூமி பூஜையுடன் நடைபெற்றது. 

இதில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 14வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன், 15வது மண்டல குழு தலைவர்/192வது வார்டு கவுன்சிலர் மதியழகன், மாநகராட்சி கல்வி, பூங்கா, விளையாட்டு நிலைக்குழு தலைவர்/181வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன், 183வது வார்டு கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சோமு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு, 183வது வட்ட திமுக செயலாளர் பி. எஸ். ஆறுமுகம், மாநகராட்சி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி