காஞ்சி: சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள் சுங்குவார்சத்திரத்தில் அவதி

58பார்த்தது
காஞ்சி: சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள் சுங்குவார்சத்திரத்தில் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக கீழச்சேரி செல்லும் நெடுஞ்சாலை 18 கி. மீ. , துாரம் கொண்டது. வண்டலுார்  வாலாஜாபாத் சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தண்டலம் -- அரக்கோணம் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஏராளமான கனரக வாகனங்கள், இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன.

இந்நிலையில், தொழிற்சாலைகளுக்கு மூலப்பெருட்கள் ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகள், சுங்குவார்சத்திரம் மேம்பாலத்தின் அருகில், வாலாஜாபாத் - கீழச்சேரி சாலையின் ஓரம் நிறுத்துக்கின்றனர். இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால், நெரிசல் மற்றம் விபத்துகள்அதிகரிக்கின்றன.

இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களால் விபத்தில்சிக்குகின்றனர். உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுதுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி