சோழிங்கநல்லூர்: அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா

82பார்த்தது
சோழிங்கநல்லூர்: அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா நேற்று (அக். 20) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் அதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ கே. பி. கந்தன், புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாநில மாணவரணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறன், கவுன்சிலர் கே. பி. கே. சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி