செங்கல்பட்டு மாவட்டம்
சிங்கபெருமாள் கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரி, 20. இவர், நேற்று காலை 6: 00 மணிக்கு, வீட்டின் அருகில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடையில், நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அப்போது, அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், மகேஷ்வரி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து, மகேஷ்வரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், ரயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்றதால், செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.