பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது "உங்களது போராட்டங்களை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசிய வீடியோவை பார்த்த பிறகுதான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டு இங்கே வந்திருக்கிறேன்" என பேசினார். இந்நிலையில், விஜய் கூறிய அந்த ராகுல் என்ற சிறுவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த திட்டத்தை கைவிடும்வரை பள்ளிக்கு போவதில்லை என அவர் கூறினார்.