அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை

65பார்த்தது
அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். இப்பள்ளியைச் சேர்ந்த சாய்ராம் என்ற மாணவரும் பங்கு பெற்றிருந்தார். தற்போது அதே பள்ளியைச் சேர்ந்த 19 மாணவர்கள் "ஒரு ஊர்ல" எனும் சிறுகதை நூலை எழுதி எழுத்தாளர்களாக மாறியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் "தேன்சிட்டு" இதழை வாசித்து "ஒரு ஊர்ல" என்ற சிறுகதை நூலை எழுதியுள்ளனர். இப்புத்தகம் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி