இடைத்தேர்தல்: ஈரோடு மாவட்டத்திற்கு பிப்., 05 அரசு விடுமுறை

78பார்த்தது
இடைத்தேர்தல்: ஈரோடு மாவட்டத்திற்கு பிப்., 05 அரசு விடுமுறை
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு மாவட்டத்திற்கு பிப்., 05ஆம் தேதி அரசு விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த தொகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, நாதக இடையே போட்டி நிலவுகிறது. சுயேட்சைகள் உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி