சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 2025 ஜனவரி 16ஆம் தேதி முதல் பிப்., 15ஆம் தேதி வரையிலான ரூ.1,000 மதிப்புடைய பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விற்கப்படும். பொங்கல் திருநாள் தொடர் விடுமுறை காரணமாக மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ரூ.1,000 மதிப்புடைய பயண அட்டை விற்பனை வருகிற 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.