திமுக எம்.பி. கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் கல்லூரி உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ. 13.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர் வீட்டின் லாக்கர் உடைக்கப்பட்டு ரூ. 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.