உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

85பார்த்தது
உலக பூமி தினத்தை முன்னிட்டு 1 கிலோமீட்டர் தூரம் பதகைகளுடன் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய 9 வயது சிறுமி.


ஏப்ரல் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக பூமி தினமாக கொண்டாடப்படுகிறது 1970 முதல் பூமி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இந்த நாளில் பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பூமி மாசடைவதை தடுக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
அந்த வகையில்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன் இவரது மகள் சாமினி வயது 9 இவர் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ஏப்ரல் 22 இன்று உலக பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 1 கிலோமீட்டர் நடந்து சென்று அவரது வீட்டில்
செடி நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

9 வயது சிறுமியின் இந்த செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி