கூடுவாஞ்சேரி அருகே பெட்ரோல் ஏத்தி வந்த லாரியில் திடீரென புகை வந்து தீப்பற்றியதால் பரபரப்பு.!!!
துரிதமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
சென்னை மணலியில் இருந்து பாண்டிச்சேரிக்கு பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கூடுவாஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தது லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்
அப்போது கூடுவாஞ்சேரி அருகே வரும்போது லாரி பின் டயரில் இருந்து லேசான புகை வந்துள்ளது இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியை இடதுபுறம்
நிறுத்தினார் பின்பு மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கார்த்திகேயன் தலைமையில் கொண்ட தீயணைப்புத் வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
பின்பு தீ விபத்து குறித்து விசாரணை செய்ததில் லாரி பிரேக் ட்ரம் சூடானதால் புகை ஏற்பட்டு தீப்பற்றியது என தெரியவந்தது.
துரிதமாக சம்பவ இடத்திற்கு வந்து பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரியில் பற்றிய எரிந்த தீயினை அனைத்த தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.!!!