செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குரோம்பேட்டை, துர்கா நகரைச் சேர்ந்தவர் கிரண், (20). சேலையூரை அடுத்த காமராஜபுரத்தைச் சேர்ந்த அஜித், (25). இவர் கிரணிடம் சிறுகச்சிறுக, 15, 000 ரூபாய் வரை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஜூலை, 23ம் தேதி, கிரணின் மொபைல் எண்ணிற்கு போன் செய்து, மீண்டும் பணம் கேட்டுள்ளார். கிரண் இணைப்பை துண்டித்துள்ளார்.
தொடர்ந்து, ஆக. , 26ம் தேதி, ராஜகீழ்ப்பாக்கம் அருகே கிரண் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அஜித் உள்ளிட்ட சிலர், கிரணை மிரட்டி, அவரது மொபைல் போன் மற்றும் 5, 000 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதையறிந்த, கிரணின் பெற்றோர், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று(செப்.11) முன்தினம், அஜித் உள்ளிட்ட நான்கு பேரை, சேலையூர் போலீசார் கைது செய்தனர்.