மதுராந்தகம் அருகே அதிமுக கட்சி நிர்வாகி இறந்த ஒன்றிய செயலாளர் உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பத்து நாட்களுக்கு இறந்துள்ளார் இவரது உருவப் படத் திறப்பு விழாவிற்கு அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரம்பாக்கத்தில் உள்ள இறந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இல்லத்தில் அவரது உருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார் மேலும் இறந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் கூறினார் இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம் என அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் இறந்த பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்
பத்திரிகையாளரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி பொறுப்பு வகித்து இறக்கும் வரை பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி கட்சியில் பல பொறுப்புகள் வகித்து அதிமுகவின் சிறந்த தொண்டனாக பணியாற்றியவர் என கூறினார். மேலும் பத்திரிகையாளர்கள் பாஜக அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்.