திமுக கவுன்சிலர் உள்பட ஆறு பேர் கைது

59பார்த்தது
திமுக கவுன்சிலர் உள்பட ஆறு பேர் கைது
மதுராந்தகம் அருகே 11 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் தாம்பரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் உள்பட ஆறு பேர் கைது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமாரவாடி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சென்னை கொளப்பாக்கம் வண்டலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் என்பவர் 11 நாட்களுக்கு முன்பு தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்ட படாளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் அவர்கள் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக தாம்பரம் மாநகராட்சி 45 வது வார்டு திமுக கவுன்சிலர் தாமோதரன் உட்பட ஸ்டீபன் ராஜ், யோஜே'ஸ் பிரவீன், ராஜ்குமார் பூங்காவனம் என 6 நபர்களை இன்று காலை படாளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைக்கு பிறகு இந்த கொலை எதனால் செய்யப்பட்டது என தெரியவரும்.

தொடர்புடைய செய்தி