அரசு பள்ளியில்- 28- லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டு விழா

268பார்த்தது
அரசு பள்ளியில்- 28- லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டு விழா
திருவந்தவார் கிராமத்தில் ,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழிமணி தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு துணைத் தலைவர் வசந்திகுமார்,

மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் எஸ். ஆர். வெங்டேசன், முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான க. சுந்தர்-எம்எல். ஏ கலந்து கொண்டு ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல்நாட்டி வைத்தார்.

பின்னர் திருவந்தவார் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 20 -நபர்களுக்கு ஈமச்சடங்கிற்கு
ரூ. 1 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கினார்.
பின்னர் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து அவற்றை பாதுகாக்கும் படி பள்ளி மாணவர்ளுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் டி. குமார்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :