சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தலை கீழாக கவிழ்ந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில்கார் கவிழ்ந்து விபத்து சென்னையை சேர்ந்த ஜோயல் என்பவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி. நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது மதுராந்தகம் கிளியாற்று மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.