மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.02) விழுப்புரம் செல்கிறார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தை புரட்டிப்போட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகும் விழுப்புரத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. அம்மாவட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 5 அமைச்சர்கள் முகாமிட்டுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு விழுப்புரம் செல்லும் மு.க.ஸ்டாலின் மழைப் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.