200 ஏக்கர் விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் வேதனை

74பார்த்தது
மதுராந்தகம் அருகே மின் மாற்றி பழுதடைந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் 200 ஏக்கர் விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த இரும்புலி ஊராட்சிக்குட்பட்ட
சிறுகருணை கிராமத்தில் 300 -குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

அப்பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன் பழுதடைந்தது.

10 -- க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்ட் பூச்சு உதிர்ந்து எலும்பு கூடாய் காட்சி அளிக்கிறது.

மேலும், அங்குள்ள மின்கம்பங்களுக்கு இடையே மின் கம்பிகள் எட்டிப் பிடிக்கும் அளவுக்கு தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விளை நிலங்கள் காலி இடங்களாகவே உள்ளன

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளது.

இந்த மின் மாற்றி சீரமைத்து , மின்கம்பங்களை மாற்றி புதியதாக அமைத்து தரவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி