ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் 101 பால்குடம் எடுத்து ஊர்வலம்.

60பார்த்தது
புதுப்பேட்டை ஸ்ரீ செல்லியம்மன்
ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில்
பெண்கள் 101 பால்குடம் எடுத்து ஊர்வலம்.

ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ முத்தாலம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் புதுப்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன்
ஸ்ரீ முத்தாலம்மன்
திருக்கோவிலில் 101 சுமங்கலி பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தி மேளதாளம் முழங்க புதுப்பேட்டை
ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் வழியாக வலம் வந்து
ஸ்ரீ செல்லியம்மன் கோவிலை
அடைந்தனர். அதனைத் தொடர்ந்து
சுமங்கலி பெண்கள் கொண்டு வந்த பால் குடங்களை அம்மன் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்தனர்.
அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் பொழுது சில பெண்களுக்கு சாமி வந்து ஆடியதால் அனைவரும் ஓம்சக்தி பராசக்தி என பக்தி முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து
ஸ்ரீ செல்லியம்மனுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்று பக்தர்கள்
அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி