கோவில் குளம் சீரமைக்கப்படுமா?

535பார்த்தது
கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் பழமையான வியாக்ராபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சோமவாரம், பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களிலும், வியாழக்கிழமையில் குருபகவானை சுவாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் முன் உள்ள தெப்பகுளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பாசி படர்ந்து, அசுத்தமடைந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, குளத்தில் அசுத்தமாகியுள்ள தண்ணீரை அகற்றிவிட்டு, குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி