வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

73பார்த்தது
வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
காஞ்சிபுரம் மாமல்லன் நகர், மகேந்திர பல்லவன் தெருவில் அமைந்துள்ள காஞ்சிபுரம் வர்த்தக சங்க கட்டடத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.

முன்னாள் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில், சங்க தலைவராக மோதிலால், செயலராக சங்கர், பொருளாளராக அக்பர் பாஷா, துணைத் தலைவராக அஸ்லாம் பாஷா, இணை செயலராக அசோக் குமார் ஜெயின் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி