திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு துாய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை, முன்மாதிரி கிராமமாக அறிவிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகிலி, சிறுபேர் பாண்டி, தண்டரை புதுச்சேரி, திருமுக்காடு, வேடந்தாங்கல் மற்றும் மதுராந்தகம் ஒன்றியத்தில் கீழகண்டை, நெல்லி, வையாவூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், வெளிப்பகுதியில் மலங்கழித்தலற்ற, பார்வைக்கு துாய்மையாக, தங்களது கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை கிராம சபையின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், துாய்மையை தொடர்ந்து பின்பற்றுதல் குறித்து கிராம மக்களிடம் ஒப்புதல் பெற்று, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.