"சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்"

66பார்த்தது
"சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்"
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக அமைகிறது.

இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பாலம் பாதை வழியாக அமைவதால், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

இதற்கிடையே, ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள துாண்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ரெட்டேரி, கொளத்துாரைப் போல் மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில், இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 44. 6 கி. மீ. , துாரத்தில் பெரும்பாலான மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது.

தொடர்புடைய செய்தி