நெல்லை திம்மராஜபுரத்தில் அரசு பேருந்து ஒன்றில் பாஜக சின்னத்தை அக்கட்சி பிரமுகர் மருதுபாண்டி ஒட்ட முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு ஏற்பட்ட நிலையில் தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியனை சோடா பாட்டிலால் தாக்கியிருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மருதுபாண்டியை கடந்த 13ஆம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.