101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்...!

64பார்த்தது
101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்...!
காஞ்சி தெற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளில் துவங்கி வருடம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் , சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் , ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் ஏற்பாட்டின் பேரில் சார்பில் கலைஞர் 101வது பிறந்த நாள் துவக்கத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கேக்கினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேக்கினை வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து ஓரே சமயத்தில் பொதுமக்கள் வரிசையாக நின்று நூறு பேர், ஒரு கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி வித்தியாசமான முறையில் கலைஞர் 100வது பிறந்த நாள் நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி