வாலாஜாபாத்தில் மந்தவளி அம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விமரிசை

58பார்த்தது
வாலாஜாபாத்தில் மந்தவளி அம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விமரிசை
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் கிராமத்திற்கு சொந்தமான மந்தவளி அம்மன் மற்றும் நாக கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 18ம் ஆண்டு தைப்பூச விழா இன்று நடைபெறுகிறது.

விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று காலை 11: 00 மணிக்கு, வல்லப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள நாக கன்னியம்மன் கோவிலில், அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, கரகம் அலங்காரத்தில் மந்தவளி அம்மன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மந்தவளி அம்மன் கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடந்தது.

தொடர்புடைய செய்தி