பணிகள் செய்ய விடாமல் தடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சி

641பார்த்தது
2013 - ஆண்டு முதல் அச்சரப்பாக்கம் ஒன்றியம் கரசங்கால் ரயில் நிலையம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த ரயில் நிலையத்தில் விழுப்புரம் பேசஞ்சர் திருப்பதி பேஸஞ்சர் உள்ளிட்ட மூன்று ரயில்கள் இரு புறமும் நின்று சென்றன. இந்த ரயில் நிலையம் ரத்தானதில் இருந்து கரசங்கால், நெடுங்கல், புறங்கால் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் கோரிக்கை மனு என தொடர்ந்து மத்திய ரயில்வே துறைக்கு கோரிக்கை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரயில் பயணிகள் காத்திருக்கும் ரயில் பிளாட்பாரம் பிளாட்பாரம் மேற்கூரை மற்றும் பிளாட்பாரங்களை அகற்றும் பணியின் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டனர். மீண்டும் கசங்கால் ரயில் நிலையத்தில் உள்ள பயனற்ற மேற்கூரை பிளாட்பாரங்களை இடிக்க ஜேசிபி இயந்திரத்துடன் ரயில்வே அதிகாரிகள் வந்திருந்தனர் இந்த தகவலை கேட்ட கரசங்கால், நெடுங்கால் உள்ளிட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தில் பணிகள் செய்ய விடாமல் தடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். பொழுது அங்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீஸ் மற்றும் ரயில்வே துறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி