நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது எனவும், ஒழுக்கமுள்ள மிகசிறந்த தலைவன் இல்லாவிட்டால் கேலிக்கூத்தாகிவிடும் என கூறியுள்ளார். பெரியார் குறித்த பேச்சுக்காக சீமான் தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி நடக்கவில்லை. கட்சி தொடங்கி 15 ஆண்டுகள் ஆன பின்பும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் முயற்சி செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.