பஞ்சாப்: பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராம் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 20 பேருடன் சென்ற வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 9 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.