தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்வு இன்று (ஜன.31) பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். தொடர்ந்து, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணையவுள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.