சரேகமா இந்தியா லிமிடெட் (SIL) நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் “உரிய அங்கீகாரம் இல்லாமல் ‘என் இனிய பொன் நிலாவே பாடலை வரவிருக்கும் தமிழ்ப் படத்திற்காக மீண்டும் உருவாக்கி உள்ளனர்” என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது.