அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு கிடைத்த போதும் தொடர்ந்து உழைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஜாக்லின் என்ற பெண்ணுக்கு சுமார் ரூ.8 கோடிக்கு லாட்டரி பரிசு அடித்துள்ளது. இந்நிலையில் அவர், இவ்வளவு பணம் தனக்கு ஒரேநாளில் கிடைத்தாலும், தான் தொடர்ந்து உழைத்து வருமானம் ஈட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.