திருப்போரூர் எம். எல். ஏ... எஸ். எஸ் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

74பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் விசிக துணைப் பொதுச் செயலாளருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ் எஸ் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்; 

தமிழக அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று முறையான ஐந்தாவது ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆளுநர் உரை சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்போரூர் தொகுதி பொறுத்த வரை இத்தகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் உள்ளது அவற்றை பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரான என்னுடைய கவனத்திற்கு எடுத்து வரப்படுகிறது.

இந்த திருப்போரூர் தொகுதியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்களுடைய ஒத்தடிப்போடு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்த திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் பகுதியில் முறையான பேருந்து நிலையம் இல்லை என ஒரு பெரிய கவலை ஒன்று இருந்து வந்தது ஆனால் தற்பொழுது திமுக அரசு பொறுப்பேற்ற தொடர்ந்து சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி