தவெக மாநாடு வெற்றி பெற சீமான் வாழ்த்து

81பார்த்தது
தவெக மாநாடு வெற்றி பெற சீமான் வாழ்த்து
தவெக மாநாடு நாளை (அக். 27) நடைபெறுவதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்கத்தில், “அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள், தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி