செங்கல்பட்டு அருகே போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) சார்பில் 50 கோடி மதிப்பிலான 2, 322 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11 முதல் ஜனவரி 25, 2025 வரையிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நாட்களை முன்னிட்டு 50 கோடி ரூபாய் மதிப்பிலான 2, 322 கிலோ போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை செங்கல்பட்டு அடுத்த தென்மேல் பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் எரித்து அழிக்கப்பட்டன. இதில் 1, 777 கிலோ கஞ்சா, 3 கிலோ ஹாஷிஷ், 19. 2 கிலோ மெத்தம்பேட்டமைன், 3. 8 கிலோ ஹெராயின், 1. 3 கிலோ கொகைன், 517. கிலோ எபெட்ரின் உள்ளிட்ட 2, 322 கிலோ போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.