காஞ்சிபுரம்: குடும்பநல அறுவை சிகிச்சை காஞ்சியில் விழிப்புணர்வு பேரணி

63பார்த்தது
காஞ்சிபுரம்: குடும்பநல அறுவை சிகிச்சை காஞ்சியில் விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், உலக நவீன வாசக்டமி வார விழாவை முன்னிட்டு, ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதியிலிருந்து டிசம்பர் 31 வரை உலக நவீன வாசக்டமி வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக நவீன வாசக்டமி வார விழாவை முன்னிட்டு, ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள், அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கு, 1,100 ரூபாய், ஊக்குவிப்பார்களுக்கு 200 ரூபாயை அரசு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால், குடும்பநல சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஹிலாரினா ஜோசிட்டா நளினி மற்றும் மாவட்ட குடும்பநல துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி