செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி தலைவி காயத்ரி, இவரது கணவர் ம. தனபால் இவர், 1991 முதல் 1992-ம் ஆண்டு வரை அ. தி. மு. க. சார்பில் வெற்றி பெற்று திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கல்பாக்கத்தில் உள்ள அரசு லைப்ரரியில் சென்று அங்குள்ள புத்தகங்களை படித்து வந்தார். தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பி. எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
குறிப்பாக தற்போது பலர் 24 மணி நேரமும் செல்போனுக்கு அடிமையாகி விட்டதால் அரசு லைப்ரரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பலர் புத்தகங்கள் வாயிலாக படிப்பதை குறைத்துவிட்டு, டிஜிட்டல் முறையில் செல்போன் வழியாக பாட புத்தகங்களை படித்து தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இன்றும் எளிமையாக வாழ்ந்து வரும் முன்னாள் எம். எல். ஏ. தனபால், கல்பாக்கம் தவிர வெளியிடங்களுக்கு சென்றாலும் அங்கு அரசு நூலகங்களை தேடி கண்டுபிடித்து புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் தற்போது பி. எச். டி பட்டம் பெற்றுள்ளதை தங்கள் கல்பாக்கம் கிளை நூல் நிலையத்திற்கு ஒரு கவுரவம் ஏற்பட்டிருப்பதாக கருதி அங்குள்ள வாசகர் வட்ட நண்பர்கள் பி. எச். டி பட்டம் பெற்ற தனபாலுக்கு, தங்கள் லைப்ரரியிலேயே பாராட்டு விழா நடத்தி மகிழ்ந்தனர்.