அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம் தாய்-தந்தை இல்லாத பெண்களுக்குப் பொருந்தும். இ-சேவை மையத்தில் திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி இல்லாத ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ.25000 ரொக்கமும், 8 கிராம் தங்கக்காசும், பட்டப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50000 & 8 கிராம் தங்கக்காசும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.