ரயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

50பார்த்தது
ரயிலில் அடிபட்டு இளம்பெண் பலி
கரூர்: குளித்தலை குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவக்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர் பெட்டவாய்த்தலை ரயில் நிலையத்திற்கும் குளித்தலை ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தின் அருகே நேற்று காலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த மயிலாடுதுறை, சேலம் பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி இருப்புப் பாதை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி