கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்த முகாமில், 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ. டி. ஐ. , டிப்ளமா, கலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என, 1, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் 147 தனியார் நிறுவனங்களும், எட்டு திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று, தங்களுக்கு வேண்டிய 248 பேரை தேர்ந்தெடுத்தன.
இவர்களுக்கான நேரடி பணி நியமன ஆணையை, ஸ்ரீபெரும்புதுார் தி. மு. க. , - எம். பி. , பாலு, அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆகியோர் வழங்கினர்.