1 லட்சம் ருத்ராட்சத்திலான தேரில் மாணிக்கவாசகர் பவனி

66பார்த்தது
1 லட்சம் ருத்ராட்சத்திலான தேரில் மாணிக்கவாசகர் பவனி
காஞ்சிபுரம் மாவட்டம் திருவள்ளுவர் தெருவில், காமாட்சியம்மன் உடனுறை பணாமணீஸ்வரர் கோவிலில், 9வது ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி காலை 6: 00 மணிக்கு இடப கொடியேற்றப்பட்டமும், திருவாசகம் முற்றோதலும், காலை 8: 30 மணிக்கு, 1, 000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்வு நடந்தது.

காலை 9: 00 மணிக்கு திருக்குடை உற்சவமும், 108 பால்குட ஊர்வலத்துடன், சிவபூத கைலாச வாத்தியங்கள் இசைக்க, 1 லட்சம் ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட தேரில் எழுந்தருளிய மாணிக்கவாசக பெருமான், திருவள்ளுவர் தெரு, வி. என். பெருமாள் தெரு, வரதராஜபுரம் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, பொய்கையாழ்வார்குளம், நேதாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பவனி வந்தார்.

பிற்பகல் 12: 00 மணிக்கு பாலாபிஷேகமும், பிற்பகல் 1: 00 மணிக்கு அன்னம்பாலிப்பும், மாலை 6: 00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7: 00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி