தமிழக மீனவர்கள் விடுதலை

66பார்த்தது
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 19 பேர், நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையிலிருந்து சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு வாகனங்களில், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் மொத்தம் 19 மீனவர்கள், கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நள்ளிரவில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அதோடு இவர்கள் எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்து உள்ளதாக குற்றச்சாட்டை கூறி, இரண்டு படகுகளையும், அவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு 19 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இலங்கை சிறையில் அடைத்தனர். தமிழக அரசின் தீவிர முயற்சியால் இலங்கை சிறையில் இருந்து இன்று மீனவர்கள் விடுதலை செய்து சென்னை வந்தன அவர்கள் சொந்த ஊருக்கு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டன
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி